உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - நெறகுன்றம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது போளிவாக்கம் ஊராட்சிஇந்த நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக வாகனம், இலகு ரக வாகனம், பை என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இங்குள்ள போளிவாக்கம் ஏரி 100 சதவீதம் நிரம்பியதால் ஏரிக்கு வரும் மழைநீர் நெடுஞ்சாலை மற்றும் தரைப்பாலத்தில் நேற்று அதிகாலை முதல் வழிந்தோடி வருகிறது.இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக டூ- வீலரில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாயினர். தகவறிந்த மணவாளநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி