உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சரக்கு வாகனங்களில் பயணம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

சரக்கு வாகனங்களில் பயணம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசித் தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.இப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவாக உள்ளன.இதனால் விவசாய பணிகள் மற்றும் கட்டட பணிக்காக செல்லும் மக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல அரசு பேருந்துக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் சரக்கு வாகனங்களில் மக்கள் ஏறிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியரும் பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது.இதனால் ஏற்படும் இடப்பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கட்டடம் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் மக்கள் சரக்கு வாகனங்களில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஊத்துக்கோட்டை பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி