உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்

கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலத்தில் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள், கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா, கடந்த 2022 ஜூலையில் நடந்தது. இதில், கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அதிகத்துார், 64, ஏகாட்டூர், 14, பிஞ்சிவாக்கம், 10, நயப்பாக்கம், 21, கடம்பத்துார், 20, திருப்பாச்சூர், 47, கண்ணாம்மாபேட்டை, 24, தொடுகாடு, 17, என மொத்தம் 217 பேருக்கு, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.அப்போதைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த விழாவில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பட்டாக்களை வழங்கினர்.இந்நிலையில், இப்பகுதியில் குடிநீர், கால்வாய், தெருவிளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், கடந்த இரு ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று காலை 10:00 மணியளவில், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, தொடுகாடு பகுதியில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும். பழங்குடியின மக்களை மிரட்டும் குமாரசேரி ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பத உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கடம்பத்துார் ஒன்றிய அலுவலர் வரதராஜன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கடிதம் வழங்கினார். இதையடுத்து, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ