உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

புல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள தலக்காஞ்சேரி பகுதியில் கிருஷ்ணா கால்வாய் அருகே புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாலம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புன்னம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், 55 செல்வராஜ், 60 என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ