உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து டிப்பர் லாரிகள் வாயிலாக, திருத்தணிக்கு மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி, திருத்தணி போலீசார் நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல், 8 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு 80,000 ரூபாய். தொடர்ந்து போலீசார், லாரி ஓட்டுனர் விப்புன், 34, உதவியாளர் செல்வகுமார், 33, ஆகியோரை கைது செய்து, இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை