உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேலை வாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பு கிடைக்காதோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு - 200 ரூபாய், தேர்ச்சி பெற்றோருக்கு - 300; மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றோர் - 400, பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, முறையே 600, 750 மற்றும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தகவல் பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நாடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை