உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதுகாப்பில்லாத கோவில் குடிநீர் தொட்டி

பாதுகாப்பில்லாத கோவில் குடிநீர் தொட்டி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சானுார் மல்லாவரம் கிராமத்தின் தெற்கில் உள்ள மலை மீது பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மலைக்கோவில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் திருமணங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடிவாரத்தில், ஊராட்சி சார்பில் சிறுமின்விசை குழாய் நிறுவப்பட்டது. இதனால், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், மலையடிவாரத்தில் சமுதாயக்காடு வளர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த வளாகம் பசுமையாக மாறிவருகிறது.மலையடிவாரத்தில் திறந்தவெளியில் உள்ள சிறுமின்விசை குழாய், பறவைகள் மற்றும் விலங்குகளால் அசுத்தம் ஆகும் நிலை உள்ளது. இதனால், சிறுமின்விசை குழாய்க்கு பந்தல் மற்றும் தடுப்பு வேலி அமைக்கவும், குழாய் பாதுகாப்பாக வெளிப்புறத்தில் நிறுவவும் வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை