உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதுகாப்பற்ற சூழலால் பயன்பாட்டிற்கு வராத அரசு மாணவர் விடுதி

பாதுகாப்பற்ற சூழலால் பயன்பாட்டிற்கு வராத அரசு மாணவர் விடுதி

ஆரணி:சோழவரம் ஒன்றியம், ஆரணி பகுதியில், மொத்த காய்கறி மார்க்கெட் அருகே, 1.60 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் மாணவர் விடுதி நிறுவப்பட்டது. கடந்த, 2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அந்த விடுதி திறக்கப்பட்டது. திறந்து ஆறு மாதங்களாகியும், அந்த விடுதியில் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.ஆனால் தினசரி, காலை மற்றும் மதிய நேரத்தில், 40 மாணவர்களுக்கு உணவு தயாரித்து, ஆரணி அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில், ஆரணி பகுதியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் விடுதிக்கு சென்று உணவு சாப்பிட்ட பின், வீட்டிற்கு செல்கின்றனர்.இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவனை சக மாணவன் அடித்து கொலை செய்தான். பள்ளியில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்று ஒருவரும் இல்லாதவிடுதிக்கு யாரை நம்பி பிள்ளைகளை அனுப்புவது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு மேற்பார்வையாளர், ஒரு இரவு நேர காவலரை நியமிக்க அரசு முன் வர வேண்டும்' என தெரிவித்தார்.இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், சுற்றியுள்ள பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பழங்குடியின மாணவர்களிடம் பேசி வருகிறோம்.பலர் விடுதியில் வசிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். விரைவில் போதிய ஊழியர்கள் நியமித்து மாணவர் விடுதி முழுமையாக இயங்கும்' எனதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி