உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியம்பாக்கத்தில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தல்

நந்தியம்பாக்கத்தில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தல்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கொங்கியம்மன் நகரில், 10ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள குடியிருப்புகளின் மின்வினியோகத்திற்காக, இரும்பு கம்பங்கள் பதிக்கப்பட்டன.அதில் மின்ஒயர்கள் பொருத்தி, மின்வினியோகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல்காற்றின்போது, இவற்றில் சில சேதம் அடைந்தன. அதிலிருந்த மின்ஒயர்கள் அறுந்து மின்வினியோகம் பாதித்தது. உடனடியாக மின்இணைப்பு வழங்கவேண்டிய நிலையில், அங்கு புதியதாக சிமென்ட் மின்கம்பங்கள் பதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன.புயல் வீசி ஆறு மாதங்கள் ஆன நிலையில், சேதம் அடைந்த இரும்பு மின்கம்பங்கள் இதுவரை அகற்றப்படாமல் அதே நிலையில் இருக்கின்றன. சாலையோரங்களில் விழுந்தும், குடியிருப்புகளின் அருகில் சாய்ந்தும் உள்ளன.குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாகவும், அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் இவற்றை அகற்ற வேண்டும் என தொடர்ந்து குடியிருப்புவாசிகள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ