மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி உடனுறை திருமாலீஸ்வரர் கோவில். பழமையான இந்த கோவிலின் கோபுரம் மற்றும் வெளிபிரகாரம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. இந்த கோவிலுக்குபள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் இருந்து திரளானபக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆற்றின் மறுகரையில்உள்ள சொரக்காய் பேட்டை, மேலப்பூடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் ஆற்றை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவில் கொடிமரம், 27 அடி உயரம் கொண்ட கல்லால் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. கொடிமரத்திற்கு முன்பாக, கோவில் குளம் உள்ளது. இந்த குளம் நீண்டகாலமாக பராமரிக்கப்படாததால், குட்டையாக காணப்படுகிறது.குளத்தின் படிகள் சிதைந்து கருங்கற்கள் கொட்டி வைத்துள்ளது போல காணப்படுகிறது. இதனால், குளத்தில்தண்ணீர் நிறைந்திருந்தும் பூஜைக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளத்தில் யாரும் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கோவில் குளத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago