உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செக்கஞ்சேரியில் கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு

செக்கஞ்சேரியில் கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கிராமவாசிகள் எதிர்பார்ப்பு

சோழவரம், சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றிற்கு செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாய் முழுதும் மரம், செடிகள் வளர்ந்துள்ளன. இருகரைகளும் சரிந்து கிடக்கின்றன. கரைகளின் அருகில் உள்ள பட்டா நிலங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள குடியிருப்புகளின் உறுதிதன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது.மழைக்காலங்களில் கரைகளின் மண் அரிப்பை தடுக்க குடியிருப்பு வாசிகள் தங்களது சொந்த செலவில் மண் மூட்டைகளை அடுக்கி வைக்கின்றனர்.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மழைக்காலங்களில் கரைகளின் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி முரளி கூறியதாவது:மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் மற்றும் ஏரியின் உபரிநீர் ஆகியவை இந்த கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு செல்கிறது.கரைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதால், அருகில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், கால்வாய் கரைகளின் அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மட்டும் தவறாமல் மேற்கொள்ளப்படுகிறது.ஆனால், கரைகளை சீரமைக்க முன்வரவில்லை. கொசஸ்தலை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த கால்வாய் வழியாக மழைநீர் பின்நோக்கி பயணித்து, குடியிருப்புகளை மூழ்கடிக்கும் ஆபத்தான நிலையே உள்ளது.வரும் பருவ மழைக்குள் கால்வாயில் உள்ள மரம், செடிகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ