உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

புதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு குடியிருப்புவாசிகள் போராட்டம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் மேற்கு பகுதியில், கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீருக்காக குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில், குடியிருப்புவாசிகள் சீரான குடிநீர் வினியோகம் வழங்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வல்லுார் - எண்ணுார் துறைமுக சாலையில் குவிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அத்திப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாகவும், தற்காலிகமாக டிராக்டர்களில் வினியோகிக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் அத்திப்பட்டு புதுநகர் கிழக்கு பகுதி குடியிருப்புவாசிகள் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி, மேற்கு பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவைகளை சீராக வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ