உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கதர் கிராம தொழிற்சாலை புத்துயிர் பெறுமா? விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிய அவலம்

கதர் கிராம தொழிற்சாலை புத்துயிர் பெறுமா? விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிய அவலம்

செவ்வாப்பேட்டை:திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியில் கதர் கிராம தொழில் வாரியத்தின் மண்பாண்டம் மற்றும் சோப்பு உற்பத்தி அலுவலகம் உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அலுவலகங்கள் இயங்கி வந்தன. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, இந்த கதர் கிராம தொழில் அலுவலகத்தில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படாததால், அலுவலம் புதர்மண்டி வீணாகி வருகிறது.கதர் துணிகள் உற்பத்திக்கு அடுத்த படியாக மண்பாண்டம் மற்றும் சோப்பு தயாரிப்பு பிரதானமாக இருந்து வந்தது. வளர்ந்து வரும் உலக சந்தை போட்டியில், 'பார்' சோப்பு என்பதை பார்ப்பதே அரிதாகி விட்டது என்கின்றனர், கதர் கிராம தொழில் துறையினர். பொதுவாக ரசாயனம் கலக்காத பொருட்களை பயன்படுத்தவே பொதுமக்கள் விரும்புகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை சர்வோதயா சங்கங்கள் மட்டுமின்றி, கதர் கிராம தொழில் வாரியமும் சோப்புகளை உற்பத்தி செய்து, சாதாரண மளிகை கடைகளில் கூட விற்பனை செய்து வந்தன.இயற்கையில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பார்' சோப்பை சந்தைப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், சோப்பு மற்றும் மண்பாண்டபம் தயாரிக்கும் தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. மண்பானையில் வைக்கப்படும் சமையலுக்கு ஈடாக வேறெதும் உண்டா? அதை ருசித்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு கிடைத்த ஆரோக்கியம், இன்று நமக்கு எட்டாக் கனியாகி விட்டது. இதனால், கதர் கிராம தொழில் வாரியத்தில் தொழிற்சாலை அலுவலகம் புதர் மண்டி வீணாகி வருகிறது. மேலும், இந்த கட்டடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பகுதிவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, கிராமப்புற மக்கள் மற்றும் கிராம பொருளாதாரம் மேம்பட புதர் மண்டிக் கிடக்கும் மண்பாண்ட உற்பத்தி மற்றும் சோப்பு உற்பத்தி தொழிற்சாலை அலுவலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை