உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காக்களூர் பொது குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

காக்களூர் பொது குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், காக்களூர் கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். கிராமத்தின் தென்மேற்கில் பொதுகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு, நொச்சிலி காப்புக்காட்டில் இருந்து நீர்வரத்து உள்ளது. இதனால், ஆண்டு முழுதும் குளம் நிரம்பியே இருக்கும். இந்த குளத்தில் மீன் வளர்த்து ஏலம் விடப்பட்டது. தற்போது குளத்தில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. மேலும், குளக்கரையில் இருந்து குளத்திற்குள் குப்பை சேர்கிறது. தென்மேற்கில் உள்ள நீர்வரத்து கால்வாய் பகுதியில் கரை மிகவும் தாழ்வாக உள்ளதால், அருகில் உள்ள குப்பை கழிவுகள் காற்றில் அடித்து வரப்பட்டு குளத்தில் சேர்கிறது. இதனால், குளம் சீரழிந்து வருகிறது. குளத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், குளத்தின் நீர்வளம் பாதுகாக்கப்படும். கிராமத்தின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை