பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நாலுார் ஏரிக்கரை பகுதியில் இருந்து நாலுார் கம்மார்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஏரியின் கலங்கல் பகுதி அமைந்து உள்ளது.மழைக்காலங்களில் ஏரி நிரம்பி, மழைநீர் கலங்கல் வழியாக வெளியேறுகிறது. அப்பகுதியில் சாலை தாழ்வாக இருப்பதால், அதிக மழைப்பொழிவு காலங்களில், இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் செல்கிறது.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதித்து, கிராமவாசிகள் அத்யாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைகாலம் முடிந்து, ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறையும் வரை கிராமவாசிகளின் சிரமம் தொடர்கிறது. மேலும் இந்த சாலை முழுதும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.அவற்றில் சிறு மழை பெய்தாலும் மழைநீர் தேங்கி, வாகனங்கள் சிரமத்துடனும், வளைந்து வளைந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், மேற்கண்ட ஏரி கலங்கல் பகுதியில் சிறுபாலம் அமைக்கவும், சாலையை சீரமைக்கவும் வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த தார்ச்சாலை
திருத்தணி அடுத்த நல்லாட்டூர் ஊராட்சி, மிட்டகண்டிகை காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் காலனியில் இருந்து நல்லாட்டூர், திருத்தணி மற்றும் நகரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்ச்சாலை முறையாக பராமரிக்கா ததால் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. அதாவது தார்ச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மிட்டகண்டிகை காலனி மக்கள், பலமுறை கிராம சபை கூட்டம் மற்றும் திருவாலங்காடு ஒன்றிய அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மிட்டகண்டிகை காலனி தார்ச்சாலை சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.