| ADDED : மே 30, 2024 12:29 AM
பெரியபாளையம்,:பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் கிராமம், செங்காளம்மன் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் துளசிதாஸ். இவரது மனைவி ஹேமலதா, 47.நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, ஹேமலதாவை பாம்பு கடித்தது போல் உணர்ந்து கூச்சலிட்டார். அருகில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது, பாம்பு ஒன்று சென்றது தெரியவந்தது.உடனடியாக அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.