உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

கிண்டி: கிண்டி சிட்கோ வளாகத்தில் ஆர்.ஆர்.பிரியாணியின் சமையல் கூடம் உள்ளது. இங்கு கடலுார் மாவட்டம், ஆதீனம்குடி பகுதியைச் சேர்ந்த மாதவன், 35, என்பவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. அப்போது, ஜெனரேட்டர் இயக்கி சமையல் நடந்தது. ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதால், போதுமான வெளிச்சம் வரவில்லை.உடனே மாதவன், ஜெனரேட்டரில் உள்ள மின் இணைப்பு கேபிளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து மாதவன் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ