மப்பேடில் டிராக்டரில் சிக்கி 10ம் வகுப்பு மாணவன் பலி
மப்பேடு, காஞ்சிபுரம் மாவட்டம் காந்துார் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மனைவி விசாலாட்சி, 39. இவருக்கு, ஒரு ஆண், இரு பெண் என, மூன்று குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் கணவன் இறந்த நிலையில், பெற்றோருடன் வசிக்கிறார். இவரது மூத்த மகன் நிக்கேஷ், 15, என்பவர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருடன் விவசாய வேலைக்கு சென்று வருவதை நிக்கேஷ் வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் புதுப்பட்டு பகுதியில் விவசாய நிலங்களை உழுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை, நிக்கேஷ் ஓட்டி பழக எடுத்து சென்றார். அப்போது, டிராக்டரில் மாட்டியிருந்த உழுவதற்கு பயன்படும் ரொட்டேட்டரில் ஏற்பட்ட பழுதை நிக்கேஷ் சீரமைத்து கொண்டிருந்த போது, அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து விசாலாட்சி அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.