மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
4 hour(s) ago
திருவள்ளூர்:ருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது டியூக் இரு சக்கர வாகனத்தில் இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்த வெள்ளவேடு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், 24, பரத், 18 ஆகியோர் என தெரிந்தது.மேலும் அவர்கள் இருவர் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளவேடு போலீசார் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த உமேஷ், 25, சந்தோஷ்குமார், 24, மகேந்திரன், 42, ரோஹித், 23, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமராஜ் தர்வா, 25 ஆகிய ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ என மொத்தம் 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.வெள்ளவேடு போலீசார் ஏழுபேரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.l சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பகுதியில், நேற்று போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.அதில் பயணித்த, ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியை சேர்ந்த ஜான், 42, என்பவரிடம், 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு 1 லட்சம் ரூபாய். கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago