உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆசிரியை வீட்டில் 15 சவரன் திருட்டு

ஆசிரியை வீட்டில் 15 சவரன் திருட்டு

மீஞ்சூர்:மீஞ்சூர், காமதேனு நகரை சேர்ந்தவர் லட்சுமிகலா, 46; அரசு பள்ளி ஆசிரியை. இவரது கணவர் வடிவேல்முருகன், அரசு சட்டக்கல்லுாரியில் அலுவலக மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றிருந்தனர். மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடந்ததை கண்டனர்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 15 சவரன் நகை மற்றும், 8,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.இது குறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை