உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.17 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி விறுவிறு

ரூ.17 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் பணி விறுவிறு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை காலனி பகுதியில், 2,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு, கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, அவ்வப்போது பகுதிவாசிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பின், 15வது நிதிக்குழு மானியத்தில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை