மேலும் செய்திகள்
நில அளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
18 hour(s) ago
திருவள்ளூர்:நில அளவை துறையில், 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட நில அளவை துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 13 நில அளவையாளர், 5 வரைவாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, அவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பேச்சியப்பன், கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
18 hour(s) ago