உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதைப் பொருள் விற்ற 2 பேர் கைது

போதைப் பொருள் விற்ற 2 பேர் கைது

சென்னை, சென்னையில் வெவ்வேறு இடங்களில் ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.புனிததோமையர் மலை ஆய்வாளர் தலைமையிலான போலீசார், எம்.கே.என்.,சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசினுார் ஷேக், 26 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், 3 கிராம் ஹெராயின் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.அதேபோல், அரும்பாக்கத்தில், 5 கிராம் மெத்தம் பெட்டமைன் வைத்திருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன், 42 என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 25 ஊசி போடும் சிரஞ்சுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி