உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழில் வரி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்

தொழில் வரி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 2, 914 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் 1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம், 1,669 வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தவில்லை. முறையாக நகராட்சி அனுமதி கட்டணம் மற்றும் தொழில் வரி செலுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கியது. இருப்பினும், பலர் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். கமிஷனர் சுபாஷிணி, நீண்ட காலமாக அனுமதி மற்றும் தொழில் வரி செலுத்தாத கடைகளுக்கு, 'சீல்' வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் நேற்று, சி.வி.நாயுடு சாலையில் உள்ள வாகன உதிரிபாகம் விற்பனை கடை, மோதிலால் தெருவில் இயங்கி வந்த பாத்திர கடை ஆகிய இரண்டுகடைளுக்கும் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ