மேலும் செய்திகள்
236 சத்துணவு உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
11-Apr-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் செருக்கனுார், வீரகநல்லுார், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், அகூர், திருத்தணி நகராட்சி, சூர்யநகரம், முருக்கம்பட்டு மற்றும் அலுமேலுமங்காபுரம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கி வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்தம் 13 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஏப்., 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வரவேற்கப்பட்டது. இதற்காக, ஒன்றிய அலுவலக நுழைவு பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட சமையல் உதவியாளர் விண்ணப்பங்கள் போடுவதற்கு வசதியாக பெட்டி தயார் செய்து வைத்திருந்தனர்.நேற்று முன்தினம் மாலை 5:30 மணி வரை பெட்டியில் போடப்பட்ட விண்ணப்பங்கள், ஒன்றிய அலுவலர்கள் எடுத்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், 13 சத்துணவு உதவியாளர் பணியிடத்திற்கு, மொத்தம் 232 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தி, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11-Apr-2025