உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்

 காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்

திருத்தணி: திருத்தணி அருகே, காய்கறி வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக 40 பயணியர் காயமின்றி தப்பினர். திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்:97 பேருந்து, நேற்று அதிகாலையில் திருத்தணி சென்றது. பேருந்தை பூபாலன், ஓட்டினார். சுந்தரம், 52 நடத்துநராக பணிபுரிந்தார். காலை, 6:30 மணிக்கு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த காய்கறி வேன் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த, 40 பயணியர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை