உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு பேருந்துகள் உரசி விபத்து 50 பயணியர் உயிர்தப்பினர்

இரு பேருந்துகள் உரசி விபத்து 50 பயணியர் உயிர்தப்பினர்

திருத்தணி:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை, 10:30 மணிக்கு ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்று திருத்தணி வழியாக திருப்பதிக்கு புறப்பட்டது. பேருந்தை சிவய்யா,40 இயக்கினார். நடத்துனராக ரமேஷ்,48 பணியில் இருந்தார்.இந்த பேருந்து மதியம், 12:30 மணிக்கு, 20 பயணிகளுடன் திருத்தணி பேருந்து நிலையத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திருத்தணியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, ஆந்திர மாநில பேருந்தின் மீது உரசிவிட்டு, சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலிகள் மீது மோதி நின்றது.தனியார் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. தனியார் பேருந்தில், பயணம் செய்த, 30 பேரில், 10 பேருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இரு பேருந்துகளில், பயணம் செய்த 50 பேர் உயிர் தப்பினர். இதனால் திருத்தணி -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ