| ADDED : நவ 19, 2025 05:26 AM
ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆற்று நீர்: வடகிழக்கு பருவமழையால் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டு முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால், அவ்வப்போது உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்து முற்றிலும் நின்றதால், உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, விநாடிக்கு 500 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது. ஏரியில் தற்போது, 1.754 டி.எம்.சி., உள்ளது. நீர்மட்டம் 30.30 அடி. தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 6:00 மணிக்கு, அங்குள்ள நான்கு மதகுகளில், ஒன்று திறக்கப்பட்டு விநாடிக்கு, 400 கன அடி திறக்கப்பட்டது. அதன்பின், படிப்படியாக 800 கன அடியாக உயர்த்தப்பட்டது. இன்று காலை, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ஆந்திர நீர்வள ஆதாரத்துறை அதிகாரி கூறுகையில், 'நீர்வரத்தை பொறுத்து, வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்' என்றார்.