உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதருக்குள் மாயமாகி வரும் 100 கால் மண்டபம்

புதருக்குள் மாயமாகி வரும் 100 கால் மண்டபம்

திருப்பாச்சூர்: திருவள்ளூர் - கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சூர் பகுதியில், தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவிலில் 300 ஆண்டுகள் பழமையான நுாறு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோவில் திருவிழா நாட்கள் மற்றும் ஆரூத்ரா விழாவில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். பின் சுவாமி வீதி உலா வந்த கோவிலுக்கு திரும்பி வருவார். இந்த நுாறு கால் மண்டபம், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சேமடைந்து பரிதாப நிலையில் உள்ளது.இதை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நுாறுகால் மண்டபத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாசீஸ்வரர் சுவாமி கோவில் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி