உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு

மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கோவில் பிரகாரத்தின் வெளியே பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகள் அடங்கிய அறை உள்ளது.அங்குள்ள மின் விசிறி ஒன்றில், நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. அச்சம் அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை