உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பார் ஆக மாறிவரும் கால்நடை மருந்தகம்

பார் ஆக மாறிவரும் கால்நடை மருந்தகம்

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி. இங்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டடம் கடந்த 2018ம் ஆண்டு திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்குவந்தது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு மற்றும் விடுமுறை நாட்களில் அலுவலக வளாகம் 'குடி' மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு பணிக்கும் வரும் ஊழியர்கள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ