உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையை கடந்த பெண் டூ - வீலர் மோதி பலி

சாலையை கடந்த பெண் டூ - வீலர் மோதி பலி

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் மேம்பாலம் அருகில், செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி.,சாலையில், ஒரு பெண் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, அவ்வழியாக சென்ற புல்லட் இருசக்கர வாகனம், அவர் மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, சாலையில் கிடந்த பெண்ணை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.அதில், அவர், ஓட்டேரி கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரி, 48, என்பது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை