உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்த வாலிபர் பலி

மயங்கி விழுந்த வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை, ஏவெங்கல் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் குமார், 32. மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா, 32. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர் மேலக்கொண்டையூர் கிராமத்தில் உள்ள விஷ்ணு கோவில் சுவாமி ஊர்வலத்தில் மேளம் அடித்துக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை