| ADDED : ஜன 30, 2024 01:43 AM
மீஞ்சூர் : சோழவரம் அடுத்த பண்டிகாவனுார் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 40. இவர் திருவொற்றியூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், வேலைக்கு செல்வதற்காக பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் தன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே செல்லும்போது, மாடுகள் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மேற்கண்ட சாலையில் ஏராளமான மாடுகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரிவதும், மீடியன்களை ஒட்டி படுத்து உறங்குவதமாக உள்ளன.சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், உரிமையாளர்கள் மீது அபாராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவை செயல்படுத்துவதில், காவல், வருவாய், பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவிப்பது தொடர்கதையாக உள்ளது.