உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை

கற்கள் பெயர்ந்து மண் சாலையான ஏரிக்கரை சாலை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. இங்குள்ள ஏரியில் கடந்த 2020ம் ஆண்டு அரசு அனுமதியுடன், சவுடு மண் அள்ளும் பணி நடந்தது. இதனால், ஏகாட்டூரிலிருந்து, கடம்பத்துார் மற்றும் திருவள்ளூர் செல்லும் சாலையில் சென்ற சவுடு மண் லாரிகளால், ஒன்றிய ஏரிக்கரை சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது.மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலை சேதமடைந்து மூன்றாண்டுகளாகியும் சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள ஒன்றிய ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்