மேலும் செய்திகள்
'100 சதவீதம் ஓட்டுப்பதிவே இலக்கு'
17-Apr-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.இம்முகாமில் 'யூத் பார் ஜாப் பவுண்டேஷன், அமேசான், விப்ரோ, ரானே இந்தியா, ஸ்பார்க் மின்டா, விஸ்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ், பாங்க் பஜார்' ஆகிய ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமா வரை படித்த 63 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றேனர். இதில் 9 ஆண், 6 பெண் என, மொத்தம் 15 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, கலெக்டர் பிரதாப் பணி ஆணையை வழங்கினார். இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முட நீக்கியல் நல அலுவலர் பிரீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Apr-2025