உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாரத்தான் போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

மாரத்தான் போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, கச்சூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில், மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. கச்சூரில் துவங்கிய பேரணியை, பொன்னேரி சப்- -கலெக்டர் வாகி சன்கிட் பல்வாந் துவக்கி வைத்தார். 16 - -20 வயது வரை, 20 - - 40 வயது வரை உள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.பேரணி ஊத்துக்கோட்டையில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சப்- கலெக்டர் வாகி சன்கிட் பல்வாந், தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற லட்சிவாக்கம் ஸ்ரீலட்சுமி வித்யாலயா மெட்ரிக்., மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா, தாளாளர் சுகந்தி தலைமையில் நடந்தது. இயக்குனர் வேதா, மாணவர்களை பாராட்டி முதல் பரிசு பெற்ற மாணவன் தனுஷூக்கு 1,000 ரூபாய் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் மோகனுக்கு 750 ரூபாய் வழங்கினார். இதில் பள்ளி முதல்வர் பரமசிவம், தலைமையாசிரியர் லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை