| ADDED : பிப் 24, 2024 10:07 PM
திருத்தணி:திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் திருத்தணியிலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 10M வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்று திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரியில் இடம் பிடித்த மாணவி யுவஸ்ரீ ஆகியோருக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.பள்ளி தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் துரைகுப்பன் வரவேற்றார். இதில் திருத்தணி தி.மு.க., -- எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் பங்கேற்று அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், மருத்துவ கல்லுாரி மாணவி யுவஸ்ரீ ஆகியோருக்கு பரிசுகள் மற்றும் விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில், வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 'தினமலர்' பட்டம் வினாடி- வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு மாணவியருக்கும், லயோலா திறனறிவு தேர்வில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லுாரி முதல்வர் வேதநாயகி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் கேசவன் நன்றி கூறினார்.