| ADDED : டிச 10, 2025 06:36 AM
திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவில், பிரதம மந்திரி கிராம சாலை 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை துவக்கி வைத்தார். திருவள்ளூர் நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பின், ஊரக வளர்ச்சித் துறையினர், மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு தொடர்பாக எற்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களை காண்பித்து விளக்கினர். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், செயற்பொறியாளர் ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.