உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  உயிரிழந்த சமூக ஆர்வலர் உடல் தானம்

 உயிரிழந்த சமூக ஆர்வலர் உடல் தானம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது கண்கள் மற்றும் உடல் தானமாக வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி வி.எம்., தெருவில் வசித்தவர் விஜயசாரதி, 50; சமூக ஆர்வலர். தனியார் தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பான நிகழ்வுகளை மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் விஜயசாரதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் விருப்பப்படி, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இறுதி சடங்கு முடிந்த பின், சென்னை ரா ஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லுாரிக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை