உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வேப்ப மரத்தை வெட்டியவர் மீது வழக்கு

 வேப்ப மரத்தை வெட்டியவர் மீது வழக்கு

பள்ளிப்பட்டு: குளக்கரையில் உள்ள வேப்பமரத்தை வெட்டி அகற்றியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு, சித்துார் சாலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்: 1ல், எட்டி மூர்த்தி குளம் உள்ளது. இந்த குளக்கரையில், பழமையான வேப்பமரம் இருந்தது. இந்த வேப்ப மரத்தை, பள்ளிப்பட்டை சேர்ந்த மருத்துவர் சோமசேகர், கடந்த 23ம் தேதி வெட்டி அகற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், பள்ளிப்பட்டு போலீசில் சோமசேகர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ