சேக்காடு சுரங்கப்பாதையில் துாய்மை பணி கண் துடைப்பு
ஆவடி:பட்டாபிராம், இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே சேக்காடில், ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக நெடுஞ்சாலைத் துறை இணைந்து, 28.30 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சுரங்கப்பாதை அமைத்தது. 2023 செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.ஆனால், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சுரங்கப்பாதை சுவரை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் விளம்பரங்கள் ஒட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அலங்கோலமாக மாறி வருகிறது.மேலும், சாலையோரத்தில் படிந்துள்ள மண்ணுடன் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 5ம் தேதி, 'சேக்காடு சுரங்கப்பாதையில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மணலை அகற்றும் பணியை துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்' என, ஆவடி மாநகராட்சி தன் அதிகாரபூர்வ 'இன்ஸ்டா' சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளது.ஆனால், சுரங்கப்பாதையில் மண் எதுவும் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.