கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி, ஆரணி அடுத்த,கொசவன்பேட்டை யைச் சேர்ந்தவர்நித்திஷ், 19. கல்லுாரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் வெங்கடேசன், 20. இருவரும், இம்மாதம், 21ம் தேதி, ஆரணியில் இருந்து சென்னை நோக்கி 'கே.டி.எம்' டூ - வீலரில் சென்றனர்.டூ - -வீலரை வெங்கடேசன் ஓட்டி செல்ல, நித்திஷ் பின்னால் அமர்ந்து சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பஞ்செட்டி அருகே முன்னால் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டபோது, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.லேசான காயங்களுடன், வெங்கடேசன்உயிர் தப்பிய நிலையில், பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நித்திஷ்,நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.