உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை

வெள்ளம் சூழும் இடத்தில் தரைதளம் கட்டுவதற்கு தடை விதிக்க பரிசீலனை

சென்னை:வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பரிசீலித்து வருகிறது.மாநிலத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்துள்ளது.இதனால், இப்பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களும் அதிகரித்துள்ளன.இந்நிலையில், மழைக்காலத்தில் நீர் வழித்தடங்கள், நீர் நிலைகள் நிரம்பும் போது, குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படுகின்றன. அப்பகுதிகளில் ஆண்டில் சில மாதங்கள், மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இந்த பின்னணியில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சமீபத்திய ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.இந்த இடங்களில், எவ்வளவு உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது என்ற விபரம், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அளவிடப்பட்டது.அந்தந்த பகுதிகளிலுள்ள கட்டடங்களில் இதற்கான குறியீடு வரையப்பட்டதுடன், திட்ட அனுமதி அளிக்கும் துறைகளுக்கும் இந்த விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நடவடிக்கை

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்காத வகையில், கட்டடங்களின் தரைமட்ட உயரத்தை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இதன் அடிப்படையில் கட்டட அனுமதிக்கான விதிகளில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வெள்ளம் வரும் போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதள வீடுகளில் வசிப்போர் தான், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில், தரைதள வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் வகையில், உரிய கட்டுப்பாடுகளை பிறப்பிக்க பரிசீலித்து வருகிறோம்.இதனால், வெள்ளத்தால் வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சாத்தியமா?@

@இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் என்பவர் கூறியதாவது:வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் தரைதள வீடுகளை தவிர்க்க வேண்டும் என்பது, பொது நோக்கில் சரியானது தான். ஆனால், புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தரை தளத்தில் வீடு கட்டக் கூடாது என்பதை அறிவுரையாக அளித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதை கண்டிப்புடன் அமல்படுத்தினால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும். அதே நேரத்தில், தனி வீடு கட்டுவோர் தரை தளத்தை தவிர்த்து, மேல் தளத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால், கூடுதல் செலவும் ஏற்படும். வங்கிக் கடன் வாயிலாக நிதி பெற்று வீடு கட்டும் நடுத்தர பிரிவினருக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, விதிகளை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை