உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்

மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்

பொன்னேரி: பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷமான நாட்களாக உள்ளன. மாட்டுப் பொங்கல் தினத்தன்று, வீடுகளில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளை அழகாகி சீவி, அதில் வர்ணம் பூசுவர்.இன்று பொங்கல் திருவிழாவுடன், நாளை நடைபெறும் மாட்டு பொங்கலுக்கும் தயாராகி வருகின்றனர். நாளை மாடுகளை அலங்கரிப்பதற்காக மூக்கனான் கயிறு, மண்டை கயிறு, கொம்பு கயிறு, நடுமணி, நெற்றி சலங்கை, கழுத்து மணி என, விதவிதமான கயிறுகளை ஆர்வமாக நேற்று வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை