சென்னை: 'டிட்வா' புயல் எதிரொலியால், காசிமேடில் மீன்வரத்து குறைந்தது. அதிகபட்சமாக, 'சைனீஸ்'வவ்வால், கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனையானதால், மீன்பிரியர்கள் அதிர்ச்சிடையந்தனர். சென்னையின், காசிமேடு மீன்பிடி சந்தையில், 'டிட்வா' புயல் தாக்கம் காரணமாக, குறைவான எண்ணிக்கையிலேயே, விசைப் படகுகள் கரை திரும்பின. இதன் காரணமாக, மீன் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால், நேற்று, ஞாயிற்றுகிழமை விடுமுறை தினத்தில், ஆர்வமுடன் மீன் வாங்க வந்தவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, சைனீஸ் வவ்வால், கிலோ, 1,600 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதிக மவுசு கொண்ட, வஞ்சிரம் மீன், கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், டிச., மாதம் முழுதும், புயல், காற்றழுத்த தாழ்வு சின்னம் காரணமாக, மீன்களின் விலை உயர்வாகவே இருக்கும் என, மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், வஞ்சிரம், வவ்வால், சங்கரா, இறால் போன்ற மீன்கள் வரத்து கனிசமாக இருந்தது. விலை உயர்வால், அதிர்ச்சியடைந்த மீன் பிரியர்கள், விரும்பிய மீன்களை வாங்க முடியவில்லை என, கவலை தெரிவித்தனர். மீன்கள் விலை கிலோ .ரூ வஞ்சிரம் 900 - 1,000 கறுப்பு வவ்வால் 900 - 1,000 வெள்ளை வவ்வால் 1,000 - 1,100 சைனீஸ் வவ்வால் 1,500 - 1,600 கடம்பா 350 - 400 சீலா 400 - 500 சங்கரா 300 - 400 இறால் சிறியது 300 - 400 இறால் பெரியது 500 - 600 டைகர் இறால் 1,000 - 1,100 பாறை 500 - 600 நண்டு 300 - 400 வாலை 150 - 200 நெத்திலி 300 - 400 அயிலா 200 - 250 முழியன் 200 -250