உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெட்ரோல் பங்க் இயந்திரம் சேதம்: 5 பேருக்கு வலை

பெட்ரோல் பங்க் இயந்திரம் சேதம்: 5 பேருக்கு வலை

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு காலனி பகுதியில் சாமி ஏஜன்சி எனும் பெயரில் எச்.பி.எல்., பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு, அரக்கோணம் தாலுகா நெமிலி கிராமத்தைச் சுரேந்தர், 30, என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நேற்று பகல் 11:30 மணியளவில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து வாலிபர்கள், பெட்ரோல் போடும் இயந்திரத்தை கத்தியால் தாக்கி சேதப்படுத்தினர். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர் அருண்குமார் என்பவர், அவர்களை தட்டிக் கேட்டார். இதையடுத்து, அந்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேலாளர் சுரேந்தர் திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ