உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி முருகன் கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கும்மிடி முருகன் கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி முருகன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முன், பரந்து விரிந்து காணப்படும் அழகிய குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தின் உட்புறத்திலும், படித்துறையிலும் செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. குளத்தின் வெளிபுறத்தில் குப்பைகள் குவிக்கப்படுவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. குளத்தின் தெற்கு திசையில் இருந்த சுற்றுச்சுவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மற்ற திசைகளில் உள்ள சுற்றுச்சுவரும் விரிசல் கண்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. கும்மிடிப்பூண்டி பகுதியின் முக்கிய நீர் ஆதாரம் மட்டுமின்றி, ஆன்மிக அன்பர்கள் பெரிதும் போற்றப்படும் அந்த குளம் தற்போது சீரழியும் நிலையில் உள்ளது. குளத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, புத்துயிர் அளித்து முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை