உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மவுனம் காத்த 100 நாள் பணியாளர்கள் கோஷம் போட சொன்ன தி.மு.க.,வினர்

மவுனம் காத்த 100 நாள் பணியாளர்கள் கோஷம் போட சொன்ன தி.மு.க.,வினர்

திருவாலங்காடு:தமிழக முதல்வர் ஸ்டாலின் அறுவுறுத்தலின்படி, நேற்று மாநிலம் முழுதும் தி.மு.க.வினர் அந்தந்த ஒன்றியங்களில் 100 நாள் பணியாளர்களுக்கான சம்பள தொகையை விடுவிக்கக்கோரி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை மற்றும் புச்சிரெட்டிப் பள்ளி ஆகிய இடங்களில், தி.மு.க., சார்பில் 100 நாள் பணியாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்து, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.திருவாலங்காடில் ஒன்றிய செயலர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தது. காலை 10:00 மணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது, 100 நாள் பணியாளர்களின் நிதியை விடுவிக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 நாள் வேலை செய்யும் பெண்கள் மவுனமாக அமர்ந்து இருந்தனர்.இதை கண்ட தி.மு.க.,வினர், 'உங்களுக்காக தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மத்திய அரசை கண்டித்து நல்ல சத்தமாக கோஷம் போடுங்க' என்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. பின், 30 நிமிட ஆர்ப்பாட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ