மேலும் செய்திகள்
மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
14-Nov-2024
திருவள்ளூர்:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதைக் கண்டித்து திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு மருத்துவர் சங்க தலைவர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். நிர்வாகிகள், நந்தகுமார், ஜெகதீஷ்குமார், அனுராதா முன்னிலை வகித்தனர்.இதில், மருத்துவர், பேராசிரியர், செவிலியர் உள்ளிட்டோர் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் பாதுகாப்பு, மருத்துவர் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.நேற்று ஒரு நாள் புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையை புறக்கணித்தனர். நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையிலும், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் போராட்டம் குறித்து தெரியாமல் புறநோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல்வேறு உடல் உபாதைகளுடன் வந்து, சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
14-Nov-2024